பதற்றம் வேண்டாம்...! காஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்கும்...! - இந்தியன் ஆயில் அறிவிப்பு
No Need to Panic Gas Cylinders Available Without Interruption Indian Oil Announcement
ஈரான் - அமெரிக்கப் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு உணவகங்கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய அரசு சிலிண்டரை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், காஸ் சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடு முழுவதும் சிலிண்டர் விநியோகம் சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், தேவையற்ற பதற்றத்தால் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும், தேவைப்படும்போது மட்டும் பதிவு செய்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் ஊழியர்களும் விநியோகஸ்தர்களும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது".
English Summary
No Need to Panic Gas Cylinders Available Without Interruption Indian Oil Announcement