போலி சான்றிதழால் ரூ.4.02 லட்சம் உதவித்தொகை மோசடி... 12 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை...! - Seithipunal
Seithipunal


தேனியில் மாணவர்களுக்கான அரசு உதவித்தொகையை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பெற்ற வழக்கில், 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்த சிறப்பு நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலியான சான்றிதழ்கள் மற்றும் தவறான ஆவணங்களை பயன்படுத்தி ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய வருவாய் ஆய்வாளர் சுருளிராஜ், போடிநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன், விவேகானந்தன், ஆசிரியை அமராவதி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு மதுரையில் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணை ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய 12 பேருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா தீர்ப்பளித்தார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, அரசு நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 people sentenced to one year prison 4point02 lakh scholarship fraud using fake certificates


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->