'முதலீடுகளை ஈர்ப்பதில் அலட்சியம் வேண்டாம்'...! முதல்வர் உடனடியாக தலையிட நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை அதிகரிக்க, சட்ட அனுமதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் உதவிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தி விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில் தெரிவித்திருப்பதாவது,"2025–2026 ஆம் ஆண்டில் அதிகளவில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை அளிக்கிறது.

தொழில் வளர்ச்சியில் மாநிலம் சந்தித்து வரும் பின்னடைவை இந்த புள்ளிவிவரம் வெளிப்படையாக எடுத்துக்காட்டுவதாகவும், இதனை தற்போதைய தமிழக அரசு மிகவும் தீவிரமாக அணுக வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால சாதனைகளை மட்டுமே தொடர்ந்து முன்வைத்து பேசுவதால் தற்போதைய வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் பயன் இல்லை என்றும், மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்ப புதிய முதலீடுகளை ஈர்க்கும் செயல்திட்டங்களை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய ஏற்ற சூழலை உருவாக்குவதில் முந்தைய ஆட்சிகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், நடைமுறைக்கு வராத புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மட்டுமே சாதனையாக சுட்டிக்காட்டியதன் விளைவாக, பல முன்னணி நிறுவனங்கள் பிற மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், முந்தைய ஆட்சியின் அனுபவங்களில் இருந்து தற்போதைய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பரந்தூர் விமான நிலையம் போன்ற மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் அணுகுமுறையை கைவிட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாலை, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட இணைப்பு வசதிகள், தொழில் உட்கட்டமைப்பு, எளிதான கடன் வசதிகள், முதலீட்டாளர்களுக்கான மானியங்கள், விரைவான சட்ட அனுமதிகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தி, புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont be negligent in attracting investments Chief Minister Nayinar Nagendran urges immediate intervention


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->