களத்தில் இறங்கிய அமைச்சர் கீர்த்தனா...! புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணிகளில் வேகம்...! - நேரில் சென்று ஆய்வு
Minister Keerthana enters field Speeding up construction new fire station In person inspection
பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில், புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடங்களை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தும் பணியில் அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"மக்களிடம் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைக்கு கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக இரண்டு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
இந்த ஆய்வின்போது, பட்டாசு தொழிற்சாலைகள் அதிகளவில் செயல்பட்டு வரும் பகுதிகளில் நிலவும் அபாயச் சூழல், அவசரகால மீட்புப் பணிகளின் அவசியம், மக்கள் அடர்த்தி, எதிர்கால நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தீயணைப்பு சேவைகளின் அணுகல் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன.
பொதுமக்களின் உயிர், உடைமைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மை பொறுப்பாகும். அதனை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கும் எளிதில் சென்றடையும் வகையில் மிகவும் பொருத்தமான இடத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை விரைவில் அமைப்பதற்கான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், நடைமுறை திட்டங்களாக மாற வேண்டும் என்பதே எங்கள் அரசின் உறுதியான நோக்கம். மக்கள் நலன், உயிர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் கால விரைவான மீட்புப் பணிகளை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து செயல்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Keerthana enters field Speeding up construction new fire station In person inspection