கொளத்தூர் தொகுதியில் 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
DMK Advocate NR Elango Alleges Irregularities in 30 EVMs in Kolathur Constituency
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 30 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கியக் குற்றச்சாட்டுகள்
புதிய முகவரி டேக்: வாக்குச்சாவடி எண் 157-ல் உள்ள 3 பேலட் யூனிட்கள் (Ballot Units) மற்றும் 1 கன்ட்ரோல் யூனிட்டில் (Control Unit) வைக்கப்பட்டுள்ள முகவரி 'டேக்'கள் (Address Tags) புத்தம் புதியதாக மாற்றப்பட்டுள்ளன.
அரக்கு சீல் மாயம்: வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எந்திரங்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு அரக்கு சீல்கள் (Wax Seals) எதுவுமே வைக்கப்படவில்லை.
வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாகச் சீல் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவில்லை என்றும், இது வாக்குப்பதிவின் நம்பகத்தன்மை குறித்துப் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
DMK Advocate NR Elango Alleges Irregularities in 30 EVMs in Kolathur Constituency