பாலில் ரசாயன நெடியா...? அதிரடி காட்டிய மதுரை ஆவின்! தரம் குறைந்த 160 ஃபிலிம் ரோல்கள் திருப்பி அனுப்பப்பட்டு பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தரக்குறைபாடு கண்டறியப்பட்ட 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கே மதுரை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன வாசனை வீசுவதாக பொதுமக்கள், நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அதிகளவில் பயன்படுத்தும் பாலில் இத்தகைய வாசனை வீசியது நுகர்வோரிடையே கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை மற்றும் பல்வேறு விநியோக மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விரிவான பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.முதற்கட்ட ஆய்வில், பால் தரத்தில் எந்த பாதிப்பும் இல்லையெனவும், பால் பாக்கெட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பிலிம் ரோல்களில் ஏற்பட்ட தரக்குறைபாடே ரசாயன நெடிக்கு காரணமாக இருக்கலாம் என மதுரை ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து, தரமற்ற பாலித்தீன் பிலிம்களை வழங்கிய ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரி ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இருப்பில் இருந்த ரசாயன நெடி வீசிய 160 பாலித்தீன் பிலிம் ரோல்களும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டன.

அதேநேரத்தில், தரக்குறைபாடு கொண்ட பிலிம்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தரமான பிலிம்கள் பயன்படுத்தப்பட்டு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால், ஆவின் பால் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு வழக்கம்போல் பாதுகாப்பான பால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மதுரை ஆவின் நிர்வாகம் உறுதி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there any chemical milk Madurai Aavin took action 160 low quality film rolls were returned creating stir


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->