நடிகை ராஷி கண்ணாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கொடுத்த அன்பு பரிசு! - Seithipunal
Seithipunal


இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நடிகை ராஷி கண்ணாவுக்கு ரஜினிகாந்த் வழங்கிய ஆன்மீகப் பரிசு குறித்து அவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தனது சமூக வலைதளப் பதிவில் ராஷி கண்ணா, "Living with the Himalayan Masters" என்ற புத்தகம் தனக்குக் கிடைத்த விதம் மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:"தர்மன் படப்பிடிப்பில் ரஜினி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எங்கள் உரையாடல் ஆன்மீகம் குறித்து திரும்பியது. அப்போது இந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேனா என்று அவர் கேட்டார். நான் படிக்கவில்லை என்று கூறியதும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை எனக்குப் பரிசாக வழங்கினார்."

மேலும், "கடந்த சில வாரங்களாக அந்தப் புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். அதை படித்து முடித்த பிறகு என்னிடம் சோதனை வைப்பேன் என்றும் ரஜினி சார் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே அந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதோடு, புத்தகத்தில் தனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதியையும் வீடியோவில் வாசித்துக் காட்டிய ராஷி கண்ணா, அந்த வாசகம் தன்னை ஆழமாக சிந்திக்க வைத்ததாகக் கூறினார்."நம்மில் பலர் ஏன் தனிமையாக உணர்கிறோம் என்பதற்கான ஒரு ஆழமான விளக்கத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் நான் புரிந்துகொண்டேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆன்மீகத்தில் நீண்டகாலமாக ஈடுபாடு கொண்டவராக அறியப்படும் ரஜினிகாந்த், தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களுக்கு தன்னை பாதித்த புத்தகங்களை பரிசளிப்பது புதிதல்ல. அந்த வரிசையில் ராஷி கண்ணாவுக்கும் அவர் வழங்கிய இந்தப் புத்தகம், தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A lovely gift given by Superstar Rajinikanth to actress Raashii Khanna


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->