'படி ஏறக்கூட முடியாம மூச்சு திணறுச்சு'...! 100 கிலோ எடையால் துடித்த மோகன்லால் மகள்...! - விஸ்மயா பகிர்ந்த பகீர் அனுபவம்...! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி வரும் விஸ்மயா மோகன்லால், ஒரு காலத்தில் 100 கிலோ உடல் எடையுடன் சந்தித்த சவால்கள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த வாழ்க்கைப் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,"ஒரு கட்டத்தில் எனது உடல் எடை சுமார் 100 கிலோவை எட்டியிருந்தது.

அப்போது சில படிக்கட்டுகள் ஏறுவதற்குக் கூட பெரும் சிரமமாக இருந்தது. சில அடிகள் நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஓய்வெடுக்க வேண்டிய நிலை உருவாகும். என்னுடைய அந்த நிலையை பார்த்தவர்கள், 'ஏன் இவ்வளவு மூச்சு வாங்குகிறாய்?' என்று அடிக்கடி கேட்பார்கள். அந்தக் கேள்விகள் எனக்குள் மாற்றம் தேவை என்ற எண்ணத்தை விதைத்தன.அதன் பிறகு புதிய அனுபவத்தையும், புதிய வாழ்க்கை முறையையும் தேடி தாய்லாந்து சென்றேன்.

அங்கு 'பிட்கோ' என்ற பயிற்சி மையத்தில் 'முவே தாய்' என்ற தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஆரம்ப நாட்களில் அந்தப் பயிற்சி மிகவும் கடினமாக இருந்தது. உடலையும் மனதையும் ஒருசேர சோதிக்கும் அனுபவமாக அது அமைந்தது.அந்தச் சமயத்தில் கொரோனா தொற்று பரவியதால் இந்தியா திரும்ப முடியாமல் தாய்லாந்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தக் காலத்தை வீணாக்காமல், முழு ஈடுபாட்டுடன் பயிற்சியில் கவனம் செலுத்தினேன்.

நாளடைவில் அந்தப் பயிற்சியே எனக்கு மிகுந்த ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கத் தொடங்கியது.எனது பயிற்சியாளர் 10 உதைகள் செய்யச் சொன்னால், நான் ஒன்பதாவது உதையிலேயே சோர்வடைந்து நிறுத்திவிடுவேன். ஆனால் அவர், 'இன்னும் ஒரு முறை முயற்சி செய்' என்று தொடர்ந்து ஊக்கப்படுத்துவார்.

அந்த ஊக்கமே என்னை எல்லைகளைத் தாண்டி செல்ல வைத்தது. பின்னர் ஒரே நேரத்தில் 30 உதைகள் செய்யும் அளவுக்கு உடல் வலிமையும் மன உறுதியும் வளர்ந்தது.எனது இலக்கு வெறுமனே உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்ல. உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும், புதிய கலாசாரங்களை அறிந்துகொள்ள வேண்டும், என்னை நானே புதிதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.

தாய்லாந்தின் வாழ்க்கை முறை, அங்குள்ள மக்களின் அணுகுமுறை மற்றும் அந்நாட்டின் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கே வாழ்ந்த நாட்கள்தான் எனக்கு உண்மையான சுதந்திர உணர்வையும் புதிய தன்னம்பிக்கையையும் அளித்தன" என்று விஸ்மயா மோகன்லால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I couldnt even climb stairs and suffocating Mohanlal daughter struggling weight 100 kg Vismaya shared her harrowing experience


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->