மேகதாது அணை விவகாரம்: சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராயநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அவசர அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்
இக்கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் நேரில் பங்கேற்றுள்ளனர்:

அதிமுக: ஓ.எஸ். மணியன்
நாம் தமிழர் கட்சி: சீமான்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி: வேல்முருகன்
ஐஜேகே: தலைவர் ரவி பச்சமுத்து
பாமக: ஜெயராமன்
ஃபார்வார்டு பிளாக்: திருமுருகன்
கொங்கு இளைஞர் பேரவை: தனியரசு

மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puthiya Tamilagam Convenes All-Party Meeting in Chennai Over Mekedatu Dam Issue


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->