மக்களவையில் 272 எம்பிக்களுக்கு மேல் ஆதரவு இருக்கும் தகுதியுள்ள கட்சித் தலைவரே பிரதமராக முடியும்; கார்த்தி சிதம்பரம்..! - Seithipunal
Seithipunal


மக்களவையில் 272 எம்பிக்களுக்கு மேல் ஆதரவு இருக்கும் தகுதியுள்ள கட்சித் தலைவரே பிரதமராக முடியும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது; மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை உள்ளதால்  அதை ஈடுகட்ட யுபிஐக்கு கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் 0.4 சதவீதம் என்பர். பின்னர் அப்படியே உயர்த்திக்கொண்டே சென்று அனைத்துக்கும் வரி விதிப்பர் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது உள்ளிட்ட எந்தவொரு திட்டமாக இருந்தாலும், உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என்றும், பரந்தூரில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் சட்டச் சிக்கல்கள் உள்ளதாகவும், கையகப்படுத்திய நிலத்தை பொதுப் பயன்பாட்டுக்காகவே பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டிலேயே மோசமான விமான நிலையமாக சென்னை உள்ளதாகவும், அதனால் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையம் அவசியம் என்றும், சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைப்பதில் 15 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலையை பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளிலாவது வந்துவிடுமா என்பதில் சந்தேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மக்களவையில் 272 எம்பிக்களுக்கு மேல் ஆதரவு இருக்கும் தகுதியுள்ள கட்சித் தலைவரே பிரதமராக முடியும் என்றும், தேர்தல் முடிந்த பிறகு எந்தக் கட்சிக்கு எத்தகைய பலம் உள்ளது என்பது தெரிந்துவிடும் என்றும், பெரும்பான்மை அல்லது கூட்டணி அமைக்கும் திறன் உள்ள தலைவர் பிரதமராகலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேப்போன்று, அனைத்துக் கட்சியினரும் தங்களது தலைவர்களைப் புகழ்ந்து பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தமிழகத்தில் இந்த நடைமுறை சற்று அதிகமாக உள்ளதாகவும், திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை சுற்றி ஒரு வகை ஹீரோயிச கலாசாரம் இருப்பது அரசியல் யதார்த்தம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மனவருத்தம், கருத்து வேறுபாடு இருந்தால் ஆளும் கட்சியினர் தான் பேசி சரி செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் இதுவரை இந்தியா எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்றும், அமெரிக்க மிரட்டுகிறது; நம் ஆட்சியாளர்கள் அடிபணிகின்றனர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karti Chidambaram states that only a party leader commanding the support of more than 272 MPs in the Lok Sabha can become the Prime Minister


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->