வரலாற்றில் முதல்முறை; CoBRA படையின் முதல் பெண் தளபதி நியமனம்; யார் இந்த சஞ்சுக்தா பராஷர் IPS..? - Seithipunal
Seithipunal


இதுவரை ஆண்கள் மட்டுமே வழிநடத்திய இந்தியாவின் நக்சல் எதிர்ப்பு சிறப்புப் படையான CoBRA-வின் முதல் பெண் தளபதியாக  IPS அதிகாரி சஞ்சுக்தா பராஷர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் போலீஸ் படையான CRPF-இன் சிறப்புப் பிரிவாக 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது CoBRA (Commando Battalion for Resolute Action) பிரிவு.

அதாவது, அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்து செயல்படுவது, கெரில்லா போர் முறைகளை எதிர்கொள்வது, வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்வது, கடினமான நிலப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்காக CoBRA கமாண்டோக்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். 

இந்த சிறப்பு படைப்பிரிவினர் குறிப்பாக, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தப் படை முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

இந்நிலையில், CRPF-இன் 207-வது CoBRA பட்டாலியனின் கமாண்டண்டாக IPS அதிகாரி சஞ்சுக்தா பராஷர் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் CoBRA பட்டாலியனை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு IPS அதிகாரியாக தேர்வான சஞ்சுக்தா பராஷர், அசாம்–மேகாலயா கேடரைச் சேர்ந்தவர். காவல் துறையில் தனது பணிக்காலத்தில் தீவிரவாதம் மற்றும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

இவர் கடினமான பாதுகாப்புச் சூழல்கள் நிறைந்த பகுதிகளில் பணியாற்றியதுடன், தேசிய புலனாய்வு முகமையான NIA-விலும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் DIG பதவியில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 

இவர் அசாமில் பணியாற்றிய காலத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வகித்த பங்குக்காக, 'Iron Lady of Assam' என்ற அடையாளத்தாலும் அவர் அறியப்படுகிறார். பெண்கள் பாதுகாப்புப் படைகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்று வரும் நிலையில், CoBRA போன்ற சிறப்புப் பிரிவின் பட்டாலியன் கமாண்டண்டாக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது, இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் அதிகரித்து வரும் தலைமைப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanjukta Parashar IPS has been appointed as the first female commander of the CoBRA force a first in history


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->