திமுகவில் 5 மாதங்களாகியும் பதவி இல்லை? அதிருப்தியில் ஓ.பி. ரவீந்திரநாத்! பின்னணியில் கேம் ஆடும் தவெக!மகன் பேச்சை ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவருக்கும் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துக்கும் இதுவரை கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஓபிஎஸ் திமுகவில் இணைந்தபோது, அவருக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம், முன்னாள் மக்களவை உறுப்பினரான ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அப்போதே அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக எதிர்க்கட்சியாக மாறிய நிலையில், ஓபிஎஸ் தரப்பு அரசியல் நடவடிக்கைகளில் அமைதியாக இருந்து வருகிறது. இதற்கிடையில், ரவீந்திரநாத் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், அந்தக் கட்சித் தலைமையுடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஓபிஎஸ் உடன் இணைந்தே வந்தால் மட்டுமே அரசியல் ரீதியாக எதிர்பார்க்கப்படும் அளவிற்கு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்க முடியும் என்றும், அவர் முன்வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற வகையில் தவெக தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ்ஸிடம் ரவீந்திரநாத் ஆலோசனை தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு ஓபிஎஸ் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "ராஜினாமா செய்வது குறித்து பேச்சுக்கே இடமில்லை" என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், திமுகவில் நடைபெறவுள்ள அமைப்பு மறுசீரமைப்பின் போது, தேனி மாவட்டத்தில் முக்கியக் கட்சிப் பொறுப்பை பெற வேண்டும் என்பதில் ரவீந்திரநாத் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபுறம், ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் இருவரும் கட்சியின் மீது தங்களது முழுமையான அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் நிரூபித்த பிறகே முக்கியப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் திமுக தலைமை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல்கள் குறித்து திமுக அல்லது ஓபிஎஸ் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No post in the DMK even after five months OP Ravindranath is dissatisfied TVK is playing a strategic game in the background OPS refused to accept his son stance


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->