வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்...! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Dramatic change commercial cylinder prices What current price situation
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய விலை விவரங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன.
வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் நாடு முழுவதும் முறையே 14.2 கிலோ மற்றும் 19 கிலோ எடையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் புதிய விலைப்பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது.அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய விலை அறிவிப்பில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், அதன் புதிய விலை ரூ.2,906 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால், அந்த சிலிண்டர் தொடர்ந்து ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dramatic change commercial cylinder prices What current price situation