கடும் வெப்ப எச்சரிக்கை...! அனைத்து மருத்துவமனைகளிலும் ORS விநியோகம் கட்டாயம்...! - சுகா​தா​ரத் துறை​யினருக்கு அறி​வுறுத்​தல் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், இயல்பை விட வெப்பநிலையின் அளவு உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொது சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் ஓஆர்எஸ் (ORS) எனப்படும் உப்பு-சர்க்கரை கரைசல் பொட்டலங்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நரம்பு வழி திரவ மருந்துகள் (IV Fluids) கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப வாத பாதிப்புக்குள்ளானவர்களுக்குத் தேவையான அவசர சிகிச்சை வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பாதுகாக்கக் குளிர்பதன வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெப்ப அலை தொடர்பான பாதிப்புகளைத் துல்லியமாகச் சேகரித்து அதற்கேற்ப மருத்துவக் குழுவினர் செயல்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Severe Heat Warning ORS Distribution Mandatory at All Hospitals Instructions Issued Health Department


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->