திமுக நேர்காணலில் ஓ.பன்னீர்செல்வம் – இன்று ஸ்டாலின் சந்திப்பு!என்ன ஓபிஎஸ் எவ்வளவு செலவு செய்வீங்க! பரபரக்கும் போடிநாயக்கனூர்
O Panneerselvam in DMK interview Stalin meeting today What OPS how much will you spend Bodinayakkanur is in a frenzy
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள திமுக பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதிமுகவில் நீண்ட காலம் முக்கிய தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாதும் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது.
திமுகவில் இணைந்த பிறகு, மார்ச் 13 முதல் ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் தொடங்கியுள்ளார். திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அவர் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் செயல்முறை திமுகவில் தொடங்கியுள்ளது. கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் விருப்பமனு அளித்தவர்களை நேர்காணல் செய்து வருகின்றனர்.
அதன்படி, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் விருப்பமனு அளித்துள்ளார். இன்று நடைபெறும் நேர்காணலில் அவரை மு.க. ஸ்டாலின் நேரடியாக சந்தித்து பேசவுள்ளார்.
மேலும், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்துள்ளார். அவரிடமும் ஸ்டாலின் நேர்காணல் நடத்துவார் என கூறப்படுகிறது.
அதிமுகவில் நீண்ட காலம் எதிரணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், ஸ்டாலின் உடனான இந்த நேர்காணல் தமிழக அரசியலில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
English Summary
O Panneerselvam in DMK interview Stalin meeting today What OPS how much will you spend Bodinayakkanur is in a frenzy