பெண்ணியம் பேசுகிறோம் என குதித்த திமுகவினர் எல்லாம் இன்று எங்கே போனார்கள்? ஆதாரத்துடன் அதிமுக கொந்தளிப்பு!
admk condemn to dmk mk stalin trb raja
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் பெண்களை இணையதள கூலிப்படையை கொண்டு தரக்குறைவான சொற்களால் பேசுவதும், துன்புறுத்துவதும் தான் நீங்கள் பெண்ணியம் போற்றும் லட்சணமா?
பெண்மையை போற்றுவதாக போலி வேடம் போடும் ஸ்டாலின் மாடல் அரசு ,
அதிகார பலத்தால் ஒரு பெண்ணின் குரலை ஒடுக்க நினைப்பது கோழைத்தனம்!
நேற்று முன்னாள் அமைச்சர் அண்ணன் சி.வி.சண்முகம் அவர்கள் தவறிய பேசிய ஒரு கருத்திற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் பூதக்கண்ணாடியை வைத்து ஆராய்ந்து, பெண்ணியம் பேசுகிறோம் என குதித்த திமுகவினர் எல்லாம் இன்று எங்கே போனார்கள்?
பெண்ணியம், பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுகவினர் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போலதான் என்பதை மக்கள் ஒன்றும் அறியாமல் இல்லை.
அதிகார திமிரால் பெண்களின் குரலை நசுக்க நினைக்கும் திமுகவின் இந்த மமதைக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
admk condemn to dmk mk stalin trb raja