துலீப் கோப்பை இறுதிப்போட்டி; இஷான் கிஷன் அபாரம்; 14 ஆண்டுகளுக்குப் பின் கிழக்கு மண்டல அணி சாம்பியன்..!
East Zone team crowned Duleep Trophy champions after 14 years
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-க்கான இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல (South Zone) அணியை வீழ்த்தி, கிழக்கு மண்டல அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் (East Zone) 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாம்பியனாகியுள்ளது.
சென்னையில் இன்று நிறைவடைந்த இந்த இறுதிப்போட்டியின் ஐந்தாம் நாளில், முதல் இன்னிங்ஸில் பெற்ற பிரம்மாண்ட முன்னிலையின் அடிப்படையில் கிழக்கு மண்டல அணி கோப்பையைக் கைப்பற்றியது. போட்டியின் இறுதி நாளான இன்று, கிழக்கு மண்டல அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 07 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் குவித்து, ஒட்டுமொத்தமாக 760 ரன்கள் என முன்னிலையைப் பெற்றது.
ஆட்டம் டிராவில் முடிந்த போதிலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை விதியின் அடிப்படையில் கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸ்: 708 ரன்கள் (இஷான் கிஷன் 270 ரன்கள்).
தெற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸ்: 336 ரன்கள். கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை: 372 ரன்கள்.
கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் செயல்பட்டார். துணை கேப்டனாக வைபவ் சூரியவன்ஷி செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் இஷான் கிஷன் 270 ரன்கள் குவித்து அசத்தியதோடு, களத்தில் மிகச் சிறந்த வியூகங்களையும் அமைத்து அணியை வழிநடத்தினார். முதல்தரக் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளுக்கு இஷான் கிஷன் தயாராக இருப்பதை இந்த ஆட்டத்தின் மூலம் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்த மேட்ச்சை பொருத்தளவில் தனது 100-வது முதல்தரப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் மூத்த நட்சத்திர பந்துவீச்சாளர்முகமது ஷமி, மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். குமார் குஷாக்ரா தனது 06-வது முதல்தரச் சதத்தைப் பதிவு செய்ய, ஷிகர் மோகன் அரைசதம் அடித்தார்.
அடுத்து, தெற்கு மண்டல அணியில், முகமது சிராஜ் தீவிரமாகப் பந்துவீசிய போதிலும், கருண் நாயர், மயங்க் அகர்வால் மற்றும் சாய் கிஷோர் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் 13 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, கிழக்கு மண்டல அணி துலீப் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் கனவை நனவாக்கியுள்ளது.
English Summary
East Zone team crowned Duleep Trophy champions after 14 years