முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும்... கந்து வட்டி கும்பலால் உயிருக்கு ஆபத்து... பிரதீப்ராஜ் கொலைக்கு அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், கந்து வட்டி கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி பிரதீப்ராஜ் என்ற இளைஞர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தகுந்த பாதுகாப்பு வழங்காமல், கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாகத் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்வேன் என்று மிரட்டியதாகவும் இளைஞர் பிரதீப்ராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அடையாளம் தெரியாத கும்பலால் பிரதீப்ராஜ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவத்திற்குக் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும்.

 

தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்குத் தனிப்பட்ட விரோதங்கள் தான் காரணமே தவிர, அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்ற ரீதியில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், இளைஞர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் என்ன பதில் சொல்லப்  போகிறார்?

தலைநகர் சென்னையில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்ட இளைஞர் மறுநாளே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போய் உள்ளது என்பதற்கு நேரடி சான்று. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk condemn to tvk govt cm vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->