தங்க மோதிரம் வழங்கும் திட்டம்: ஜாய் ஆலுக்காஸ் நிறுவன டெண்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் (22 கேரட்) தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின்கீழ், நகைகள் கொள்முதல் செய்ய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில் டெண்டர் கோரப்பட்டிருந்தது. இதில் குறைந்த விலை கோரிய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துச் சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மனுதாரர் தரப்பில், மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் நகைகளை விநியோகிக்க வேண்டும் என டெண்டர் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு நகைக்கு ஹால்மார்க் கட்டணம் மட்டுமே ரூ.45 ஆகும் நிலையில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு தங்க மோதிரத்தை வெறும் ரூ.4,465-க்கு சப்ளை செய்வதாகக் கூறியிருப்பது வணிக ரீதியாகச் சாத்தியமற்றது என்றும், இதனால் நகையின் தரம் பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது. மேலும், மருந்துப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் அமைப்பான மருத்துவ சேவைகள் கழகத்திற்குத் தங்கத்தின் தரம் குறித்து என்ன அனுபவம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இ வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், மனுதாரர் இத்திட்டத்தையோ அல்லது டெண்டர் முறையையோ எதிர்த்து வழக்கு தொடரலாமே தவிர, தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றனர். குறைந்த தொகையில் மோதிரங்கள் கிடைப்பது அரசுக்கு நிதி ரீதியாக லாபமே என்றும், நிறுவனத்திடம் பெருமளவில் தங்கம் இருப்பு இருந்தால் அவர்கள் இந்த விலையைக் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவித்தனர். ஒருவேளை நகையின் தரம் குறைவாக இருந்தால் அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்ட அமர்வு, இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறித் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras HC Dismisses Plea Challenging Gold Ring Tender Awarded to Joyalukkas for Newborn Scheme


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->