கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவிற்கு சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை: மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை!
TVK MLA VS Babu on Ventilator Support in ICU Health Condition Stable Says Hospital Bulletin
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த நிர்வாகியுமான வி.எஸ். பாபு, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய உடல்நிலை குறித்து சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு, கடுமையான மூச்சுத் திணரல் காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Critical Care Unit) அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவின் நேரடிப் பார்வையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அவருக்கு உரிய உயர் சிகிச்சைகளும், சுவாசக் கருவி (Ventilator/Respiratory support) உதவியுடனான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை சீராக (Stable) உள்ளதுடன், தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார்" என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துத் தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TVK MLA VS Babu on Ventilator Support in ICU Health Condition Stable Says Hospital Bulletin