நாடு முழுவதும் நாளை போராட்டம்; வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தன. 

இதுகுறித்து டெல்லியில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், வங்கி ஊழியர் சங்கங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தங்களுக்கு சாதகமான முடிவு அல்லது உறுதியான காலக்கெடு வழங்கப்படாத வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்று வங்கி ஊழியர் சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. 

இந்த வேலைநிறுத்தம் காரணமாக தங்களின் கிளைகளின் இயல்புத் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்றும், இருப்பினும் வழக்கமான சேவைகளை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி பங்குச்சந்தைகளுக்குத் தகவல் அளித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், வரும் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bank employee unions announce nationwide protest for tomorrow


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->