புதிய படத்திற்காக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை ஒப்பந்தம் செய்த மணிரத்னம்...! - திகைக்கும் ரசிகர்கள் - Seithipunal
Seithipunal


இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தக் லைஃப்' திரைப்படத்தைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ரோஜா' திரைப்படம் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வந்த மணிரத்னம், தற்போது முதல்முறையாகப் புதிய தலைமுறை இசையமைப்பாளர் ஒருவரைத் தேர்வு செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

'கட்சி சேர' பாடல் மூலம் கவனம் ஈர்த்த சாய் அபயங்கர், மணிரத்னத்தின் இந்தப் புதிய சென்னைத் திரைப்படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mani Ratnam signs young music composer Sai Abhyankar his new film


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->