வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், செப்டம்பர் 22 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மேலும் வலுப்பெற்று, செப்டம்பர் 23 காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய 21 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதி தீவிர கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மேலும், சென்னை பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடல் நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னையில் கடந்த சில நாட்களாகக் சுட்டெரித்த வெயில் மற்றும் புழுக்கத்திற்குப் பிறகு, நேற்று இரவு கோயம்பேடு, அண்ணாநகர், தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த திடீர் கனமழை வெப்பத்தைத் தணித்து குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bay of Bengal Depression Intensifies Heavy Rain Alert Issued for 21 Tamil Nadu Districts


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->