ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே ட்ரைலர் வெளியீடு – ஜூலை 31-ல் அதிரடி ஆரம்பம்!
Spider Man Brand New Day Trailer Hits A Fresh Start for Peter Parker
மார்வெல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று உலகளவில் வெளியாகி, இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
தலைகீழான உலகம்:
இந்த டிரைலரின் தொடக்கக் காட்சியே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் தலைகீழாகத் தொங்கியபடி, பீட்டர் பார்க்கர் தனது கைபேசியை மிகவும் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னணியில் நியூயார்க் நகரம் தலைகீழாகக் காட்சியளிப்பது, அவனது தற்போதைய வாழ்க்கை எந்த அளவிற்கு நிலைகுலைந்து, 'தலைகீழாக' மாறியிருக்கிறது என்பதைக் குறியீடாக உணர்த்துகிறது. முந்தைய சம்பவங்களுக்குப் பிறகு பீட்டர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இந்த ஒரு காட்சி அழகாகப் பிரதிபலிக்கிறது.
திரையரங்குகளில் எப்போது?
உலகம் முழுவதும் வரும் ஜூலை 31, 2026 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் (MCU) ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்சன், எமோஷன் மற்றும் ஒரு 'பிராண்ட் நியூ' தொடக்கம் என அனைத்து அம்சங்களும் நிறைந்த இந்தத் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு செம்ம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
Spider Man Brand New Day Trailer Hits A Fresh Start for Peter Parker