சமையலறை ரகசியங்கள் - என்னென்னு பாக்குறீங்களா?
kitchen tips
அரிசியில் வண்டு, பூச்சிகள் வராமல் இருக்க ஒரு மெல்லிய துணியில் கல் உப்பு மற்றும் கிராம்பு சேர்த்து கட்டி அதனை அரிசி பாத்திரத்திலோ அல்லது மூட்டைலோ வைத்து விடலாம்.
பச்சை மிளகாய் இஞ்சி போன்றவற்றை காய்கறியில் போட்டு வைக்காமல் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு குளிர்ந்த இடத்தில் மூடி வைத்தால் வாரம் முழுவதும் பிரஷ் ஆகவே இருக்கும்.
எண்ணெய் பசை நீங்க கேஸ் ஸ்டவ்வை கடைசியாக டிஷ்யூ பேப்பரால் துடைக்க வேண்டும்.
தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்யும் போது சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.
பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊற வைத்தால் சுவையாக இருக்கும்.
வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பல்லி வராமல் இருக்க பூண்டு மஞ்சள் தூள் இடித்து பல்லி வரும் இடத்தில் வைக்க வேண்டும்.
சாம்பாரில் பருப்பு வேக வைக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைத்தால் உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கருவேப்பிலை, கடுகு போட்டு தாளித்து கொதிக்க வைத்தால் புதுவிதமான மோர் குழம்பு தயார்.
தண்ணீரில் சோடா உப்பு, எலுமிச்சை சாறு கலந்து ஜன்னலை சுத்தம் செய்தால் பளபளப்பாக இருக்கும்.