வடசென்னையில் கேங்ஸ்டராகும் சிம்பு! -வெற்றிமாறன் படைப்பு இரண்டு பாகங்களாக...!
Simbu becomes gangster North Chennai Vettimarans work two parts
சிம்பு அடுத்த படியாக ‘தக் லைஃப்’க்கு பிறகு, தமிழ்சினிமாவின் வித்தியாசமான கதையம்சங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் களம் இறங்க உள்ளார்.

வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் கதையாக இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த பிரம்மாண்ட முயற்சியை கலைப்புலி எஸ். தாணு தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார்.
இது அவர் தயாரிக்கும் 47வது சிறப்பு படைப்பாகும் அமைகிறது.இப்படத்தில் சிம்பு இரு வெவ்வேறு தோற்றங்களில் ரசிகர்களை கவரவுள்ளார். ஏற்கனவே வெளியான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்கப் போவதாக வெற்றிமாறன் அண்மை பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்களிடையே ஆவலும் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Simbu becomes gangster North Chennai Vettimarans work two parts