வாழை தாருக்கு பிரச்சினை; வங்கதேசத்தில் இந்து நபர் அடித்து படுகொலை..! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தில் வாழைப்பழம் காணாமல் போனது தொடர்பான தகராறில் லிட்டன் சந்திர கோஷ் (55) என்ற இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில், காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த, சுவபன் மியா (55), அவரது மனைவி மஜேதா (45), அவர்களது மகன் மாசூம் மியா (28) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மகன் மாசூம் மியா ஒரு வாழைப்பழத் தோட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாழை தோட்டத்தில் இருந்து அங்கிருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போயுள்ளது. இதனால் அதை கடைகளில் தேடியுள்ளனர். அப்போது லிட்டன் சந்திர கோஷின் உணவகத்தில் குறித்த வாழைத்தார் இருந்ததாக மாசூம் கூறியுள்ளார். இதனால், இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.

மாசூம் மியா குடும்பத்தினர், லிட்டனை அடித்தும், உதைத்தும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்தப் படுகொலையும் அவ்வாறு நடத்தப்பட்ட ஒன்றா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என்று உள்ளூர் ஊடகமான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Hindu man was beaten and murdered in Bangladesh over a dispute involving a bunch of bananas


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->