இந்தித் திணிப்பு: ரயில் முன் பாய்ந்த இளைஞரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
cm mk stalin may 17 member train accident
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே...
உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவா திலீபனையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருஜாவையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், “பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்! தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!
எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
cm mk stalin may 17 member train accident