"ஆபரேஷன் முஹாஃபிஸ்-உல்-பஹ்ர்": பாகிஸ்தானுக்குப் பாதுகாப்பாக வந்திறங்கிய எண்ணெய்க் கப்பல்கள்!
Pakistan Navy Escorts Oil Tankers Amid Middle East War Secures 220 Million Liters
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யப் பாகிஸ்தான் கடற்படை நேரடிப் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
முக்கிய ராணுவ நடவடிக்கை:
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து கராச்சி துறைமுகம் நோக்கி வந்த 2 பெரும் எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பல்கள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்தது. இந்தச் சிறப்பு நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் முஹாஃபிஸ்-உல்-பஹ்ர்' (Operation Muhafiz-ul-Bahr) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வரத்தும் பொருளாதாரத் தாக்கமும்:
எண்ணெய் அளவு: இந்தக் கப்பல்கள் மூலம் மொத்தம் 220 மில்லியன் லிட்டர் (100+120) எண்ணெய் பத்திரமாகக் கராச்சி வந்து சேர்ந்துள்ளது.
விலை உயர்வு: பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் போரால், பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இந்த வரத்து அந்நாட்டிற்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளாது.
அரசின் முக்கிய விளக்கம்:
பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கை குறித்து ஒரு தெளிவான செய்தியை வெளியிட்டுள்ளது: அதில் "இந்த நடவடிக்கை என்பது நமது நாட்டிற்கு வரும் கப்பல்களைப் பாதுகாப்பதற்கானது மட்டுமே. இதைப் பொதுவாக ஹோர்முஸ் ஜலசந்தியைக் (Strait of Hormuz) கடக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அளிப்பதாக சர்வதேச நாடுகள் கருதக் கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pakistan Navy Escorts Oil Tankers Amid Middle East War Secures 220 Million Liters