ராக்ஸ்டார் அனிருத் வேகம் குறையாது…! வரிசை கட்டும் மெகா படங்கள்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் இன்று இசை என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர் – அனிருத் ரவிச்சந்தர். ‘ராக்ஸ்டார்’ இசையமைப்பாளராக ரசிகர்களை மட்டுமல்ல, முன்னணி இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர நடிகர்களையும் தன் பக்கம் திருப்பி வைத்திருக்கும் அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ஓய்வில்லாத படு பிஸி ஷெட்யூலுடன் பறக்கத் தயாராக உள்ளார். மெகா பட்ஜெட் படங்கள் முதல் பான்-இந்தியா பிராஜெக்ட்கள் வரை அனிருத்தின் இசைப் பயணம் தற்போது உச்சத்தில் உள்ளது. அந்த பட்டியலை ஒரு பார்வை பார்ப்போம்…
ஜனநாயகன்:
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அரசியல் பின்னணியிலான படம் ‘ஜனநாயகன்’. தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு காரணமாக வெளியீடு தாமதமானாலும், படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனிருத்தின் இசையில் வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.


எல்ஐகே (LIK):
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்தப் படம், முழுக்க முழுக்க மெலடி ட்ராக்ஸ் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க அனிருத் தயாராகியிருக்கும் படமாக பேசப்படுகிறது.
தி பாரடைஸ்:
தெலுங்கு திரையுலகின் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணையும் ‘தி பாரடைஸ்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படமும் பான்-இந்தியா கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’க்காக அனிருத் ஏற்கனவே சில மிரட்டல் மெட்டுகளை தயார் செய்து வருவதாகவும், முதல் பாகத்தை விட BGM இன்னும் தகதகப்பாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர் 173:
‘தலைவர் 173’ படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இசை குறித்த அப்டேட்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கிங் (King):
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் இணைந்து நடிக்கும் ‘கிங்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அவரது பாலிவுட் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
AA23 – அல்லு அர்ஜுன்:
‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணையும் பிரம்மாண்டமான AA23 படத்திற்கும் அனிருத் தான் இசை. இந்தக் கூட்டணி பான்-இந்தியா அளவில் இசை வெடிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு.
அரசன்:
சிலம்பரசன் (STR) நடிப்பில், ‘ஓ மை கடவுளே’ புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் பிரம்மாண்ட படம் ‘அரசன்’. இந்தப் படத்திற்கான அனிருத்தின் இசை, முழுக்க முழுக்க வேறுபட்ட அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.
D57 – தனுஷ்:
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, தனுஷ் – அனிருத் கூட்டணி மீண்டும் D57 படத்தில் இணையவுள்ளது. இந்தக் காம்போ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
DC:
பிரபல இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘DC’ படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் முற்றிலும் வித்தியாசமான முயற்சியாக பேசப்படுகிறது.
MAGIC:
‘ஜெர்சி’ படத்தின் மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்திய இயக்குநர் கௌதம் தின்னனுரி – அனிருத் ரவிச்சந்தர் கூட்டணி, தற்போது ‘MAGIC’ என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் அந்த மேஜிக்கைக் கிளப்ப தயாராகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rockstar Anirudh shows no signs slowing down Mega films lining up


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->