மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு; இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் சி.பி.ஐ. - Seithipunal
Seithipunal


மணிப்பூர் இனக்கலவரத்தின் போது குக்கி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட்டார். அதன் பின்னர், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் இருந்த அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டார்.

அப்போது, ஒரு கும்பல் இவரைப் பிடித்துச் சென்று பல இடங்களில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. படுகாயங்களுடன் இருந்த அவரை ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். வன்கொடுமையால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறுதியில் கடந்த ஜனவரி 10 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2023 ஜூலை மாதம் FIR பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வழக்குத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரைக் கூட இன்னும் சிபிஐ கைது செய்யவில்லை.

இந்த பெண்ணின் மரணத்திற்கு குக்கி சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்ணுக்கு நீதி கிடைக்க மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The young woman who was gang raped during the Manipur violence has died


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->