பொய்யான தகவல்! CM ஸ்டாலின் அதிகாரிகளின் பின்னால் ஒளிந்துகொள்வது ஏன்?அண்ணாமலை கடும் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக உள்துறைச் செயலர் நேற்று வெளியிட்ட கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை ஏற்க முடியாது எனத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அரசின் இந்தத் தரவுகள் நம்பகத்தன்மை அற்றவை என்பது அவரது பிரதான குற்றச்சாட்டு.

அண்ணாமலை சுட்டிக்காட்டும் முரண்பாடுகள்:
2021-ஆம் ஆண்டுக்கான கொலை வழக்குகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக அவர் ஆதாரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்:

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB): 2021-ல் தமிழகத்தில் பதிவான கொலைகள் 1,686.

தமிழக உள்துறைச் செயலர்: நேற்று அவர் குறிப்பிட்ட எண்ணிக்கை 1,597.

"ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, பொதுவெளியில் இருக்கும் 2021-ஆம் ஆண்டு தரவுகளிலேயே இத்தனை மாற்றங்களைச் செய்யும் அரசு, இதுவரை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ள 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டு தரவுகளில் எவ்வளவு தில்லுமுல்லு செய்திருக்கும்?" என்று அவர் சாடியுள்ளார்.

முதல்வருக்கு நேரடி வினா:
உள்துறை மற்றும் காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அதிகாரிகளின் (Bureaucrats) பின்னால் ஒளிந்துகொள்வது ஏன்? என்று அண்ணாமலை வினா எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Challenges TN Govt on Crime Stats Cites Discrepancy in 2021 Data


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->