டீ + பிஸ்கட்...? உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என நிபுணர்கள் எச்சரிக்கை...!
Tea biscuits Experts warn that dangerous your health
டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு பழக்கமாக உள்ளது. ஆனால் ஆரோக்கியத்தின் முன்னிலையில் இது பாதுகாப்பான நடைமுறை அல்ல. பெரும்பாலான பிஸ்கட்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, அதிக சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு கலந்திருப்பதால், டீயுடன் சேர்த்தால் ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயரும் அபாயம் அதிகரிக்கும்.
இது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.மேலும், சாதாரண பிஸ்கட்டுகள் போதுமான நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அளவைக் கொடுக்கவில்லை. பசியைக் குறைக்கும் தோன்றினாலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்காது.

சிலருக்கு டீயுடன் சேர்த்து பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் அசிடிட்டி, வயிற்று கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே பிஸ்கட் விரும்பினால், நார்ச்சத்து நிறைந்த, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்தாலே நல்லது.
அதே போல, டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவது கூட சீரான நடைமுறை அல்ல. டீயில் உள்ள டானின், எண்ணெய்யுடன் கலந்தால் வாயுத் தொல்லை, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரும்புச் சத்துக்கு முக்கியமான உணவுகளையும் டீ உடன் உட்கொள்ள வேண்டாம். டீயில் உள்ள ஆக்ஸலேட், இரும்புச் சத்தின் உறிஞ்சுதலை தடுக்கும். ஆகையால், டீ அருந்திய பிறகு குறைந்தது சில நேரம் இடைவெளி விட்டு, இரும்புசத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
English Summary
Tea biscuits Experts warn that dangerous your health