அமைதிக்குப் குந்தகம் விளைவிக்கும் செயல்; அனுமதியின்றி காலி வீட்டில் தொழுகை செய்த 12 பேர் கைது..!
12 people arrested for offering prayers in a vacant house without permission
உத்தரப் பிரதேசத்தில் காலி வீடு ஒன்றில் முன் அனுமதியின்றி தொழுகை நடத்தியதாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரேலி மாவட்டத்தின் முகமதுகஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு காலி வீடு மதரஸாவாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதோடு, கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அனுமதியின்றி மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளதோடு, அங்கிருந்த 12 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஹனீப் என்பவருக்குச் சொந்தமான காலி வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்குப் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
English Summary
12 people arrested for offering prayers in a vacant house without permission