காசா அமைதிக்கான குழுவில் இணைய பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்த டொனால்டு டிரம்ப்..!
Donald Trump invited the Pakistani Prime Minister to join the Gaza peace committee
காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே, அமெரிக்காவின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அத்துடன், காசாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக சர்வதேச முயற்சிகளுடன் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி அமைப்பில் சேருமாறு துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
English Summary
Donald Trump invited the Pakistani Prime Minister to join the Gaza peace committee