'மத்திய அரசு அமைப்புகளிடம் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும்'; தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ள மம்தா..!
Mamata has requested the Chief Justice to ensure that the central government agencies also uphold the constitution
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நேருக்கு பேர் பேசிய மம்தா பானர்ஜி; ''மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து மேடையில் பேசிய மேற்கு வங்க முதல்வர், மத்திய ஏஜென்சிகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகளில் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பாக் தேர்தல் வியூக அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அந்தச் சோதனையைத் தடுத்ததாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Mamata has requested the Chief Justice to ensure that the central government agencies also uphold the constitution