சூர்யா – ஹெச். வினோத் கூட்டணி? புதிய படத்தின் அப்டேட்? ரசிகர்கள் குஷி! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் இணையும் புதிய திரைப்படம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கூட்டணி உருவானால் அது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தற்போது சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது கைவசம் “சூர்யா 47”, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” உள்ளிட்ட படங்களும் உள்ளன.

இதற்கிடையில், அடுத்ததாக சூர்யா இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி நடித்த “தீரன் அதிகாரம் ஒன்று”, அஜித் நடித்த “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, “துணிவு” போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் ஹெச். வினோத்.

அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் தற்போது சில சர்ச்சைகளால் வெளியீட்டை காத்திருக்கிறது.

இந்நிலையில், வினோத் கூறிய கதைக்கு சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த படம் சமூக-அரசியல் பின்னணியைக் கொண்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வழக்கம்போல் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த திட்டம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், “ஜனநாயகன்” படம் வெளியாகிய பிறகு சூர்யா – ஹெச். வினோத் கூட்டணியில் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suriya H Vinoth alliance Update on the new film Fans are happy


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->