இனி வீட்டிலேயே உயிரிழந்தாலும் 'டாக்டர் சர்டிபிகேட்' கட்டாயம்...! - தமிழக சுகாதாரத் துறை அதிரடி முடிவு
Doctor Certificate mandatory even deaths occurring home TN Health Department Bold Decision
தமிழக பொது சுகாதாரத் துறை, வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும், அந்த இறப்பிற்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து, பிறகு சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 6.96 லட்சம் உயிரிழப்புகளில், 73 சதவீதம் வீடுகளிலேயே நடக்கின்றன. இந்த இறப்புகளுக்கான முழுமையான காரணங்களைக் கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
முதற்கட்டமாக, 2023-ம் ஆண்டில் கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வீடுகளில் இறந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதில் 'வயது மூப்பு' எனக் குறிப்பிடப்பட்ட உயிரிழப்புகளை ஆய்வு செய்ததில், 20 சதவீதம் இதய நோயாலும், 7 சதவீதம் நீரிழிவு நோயாலும் நிகழ்ந்தது தெரியவந்தது.
தற்போது பெரம்பலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்பட உள்ளது.
வரும் காலங்களில் வீடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டாலும், மருத்துவர் மூலம் காரணத்தை உறுதி செய்து சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும்.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
English Summary
Doctor Certificate mandatory even deaths occurring home TN Health Department Bold Decision