கல்லாவில் காசில்லாததால் பூண்டு மூட்டையுடன் எஸ்கேப் ஆன திருடன்...! - சிசிடிவி மூலம் கைது செய்த காவலர்கள் - Seithipunal
Seithipunal


மயிலாப்பூர் நடுத் தெருவில் வசிக்கும் பாஸ்கர் (52) என்பவர், தனது வீட்டின் தரைத்தளத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 16-ம் தேதி மதியம் உணவருந்தச் சென்ற அவர், மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது மளிகைப் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், 25 கிலோ பூண்டு மூட்டை திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் திருவல்லிக்கேணி கபாலி நகரைச் சேர்ந்த முத்து (50) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கடை கல்லாப் பெட்டியில் எதிர்பார்த்த அளவு பணம் இல்லாததால், விரக்தியில் 25 கிலோ பூண்டு மூட்டையை அவர் ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,கைது செய்யப்பட்ட முத்து மீது ஏற்கனவே 10 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thief Flees Sacks Garlic After Finding No Cash Till Police Apprehend Him Using CCTV Footage


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->