பிஹார் சிறுமி பாலியல் வன்கொடுமை...! வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டிய இருவர் மீது போக்சோ வழக்கு...!
harassement Bihar Girl POCSO Case Filed Against Two Individuals Who Threatened Release Video
நீலாங்கரையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளான வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்த அந்தச் சிறுமி, நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.அப்போது அங்கு வேலை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரூபன் அந்தச் சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் ரூபனின் நண்பரான நாகாலாந்தைச் சேர்ந்த ஆலன் உசேன் (19) என்பவரும் அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என இருவரும் மிரட்டியதால், பயந்துபோன சிறுமி நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், ரூபனைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆலன் உசேனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
harassement Bihar Girl POCSO Case Filed Against Two Individuals Who Threatened Release Video