'அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும்'; அமெரிக்க அதிபர் திட்டவட்டம்..!
Trump categorically states that the naval blockade against Iran will continue in full force until an official agreement is signed
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானுடன் அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பேச்சுவார்த்தைகள் முறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்றும், தற்போதைய சூழலில் காலம் நமது பக்கமே உள்ளது. எனவே ஒப்பந்தத்தை நோக்கி அவசரப்பட வேண்டாம் என்று எனது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு தரப்பும் போதிய நேரத்தை எடுத்துக்கொண்டு இதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும், இதில் எந்தத் தவறுகளும் நடந்துவிடக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்காவுடனான ஈரானின் உறவு தற்போது மிகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கவோ அல்லது பெறவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Trump categorically states that the naval blockade against Iran will continue in full force until an official agreement is signed