விசிகவின் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய திமுக! மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த மாநில பொறுப்பு நிர்வாகி!
Over 50 VCK and TMJK Office Bearers Join DMK in Presence of Party President MK Stalin
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர் ஷானு ஹனீஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அனிதா சுகுமாரன், ஈரோடு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சாபிரா பானு, திருநெல்வேலி மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சசி சுலைமான் மற்றும் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி கொருக்குப்பேட்டை உமர் அலி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் கிளை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் அடங்குவர்.
இந்நிகழ்வின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் க. பொன்முடி, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் சுபேர்கான் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
English Summary
Over 50 VCK and TMJK Office Bearers Join DMK in Presence of Party President MK Stalin