எடப்பாடி பழனிசாமியை வேதனையில் ஆழ்த்திய விபத்து! உடல்களை மீட்க தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை!
EPS Expresses Condolences Over Death of 8 Tamil Nadu Students in Thrissur Accident Urges TN Govt to Retrieve Bodies Swiftly
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நடைபெற்ற கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திண்டுக்கல், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இளம் வயதில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எவ்விதத் தாமதமுமின்றிப் பத்திரமாகத் தமிழகத்திற்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
EPS Expresses Condolences Over Death of 8 Tamil Nadu Students in Thrissur Accident Urges TN Govt to Retrieve Bodies Swiftly