அனிருத் - காவ்யா மாறன் திருமணமா? கோலிவுட்டில் வைரலாகும் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும் சன் குழும வாரிசுமான காவ்யா மாறனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில நாட்களாக இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கும், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்துக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நெருக்கமான நட்பு இருப்பதாக ஏற்கனவே பலமுறை கிசுகிசுக்கள் வெளியானது.

இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக காணப்பட்டதாகவும், குறிப்பாக லாஸ் வேகாஸில் டின்னர் சென்றதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியிருந்தன. இதன் பின்னரே காதல் மற்றும் திருமண வதந்திகள் மேலும் தீவிரமடைந்தன.

இந்த விவகாரம் குறித்து இதுவரை அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அனிருத் சிரித்தபடி “அது வேற விஷயம்” என்று கூறி தவிர்த்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக இதுபோன்ற வதந்திகள் வெளியானபோது, “ரூமர்ஸ் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று அனிருத் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த முறை அவர் நேரடியாக மறுப்பு தெரிவிக்காதது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அனிருத்துக்கும் மாறன் குடும்பத்திற்கும் நீண்டகால தொழில்முறை தொடர்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரித்த பல பெரிய படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” உள்ளிட்ட முக்கிய படங்கள் இதற்கு உதாரணமாக கூறப்படுகின்றன.

மேலும், அனிருத் என்பது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் உறவினர் என்பதால், ரஜினிகாந்துக்கும் மாறன் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கமும் இந்த திருமண பேச்சு குறித்து கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

சில ஊடகங்களில் வெளியாகிய தகவல்களின்படி, இரு குடும்பங்களும் இந்த உறவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளியாக வேண்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

காவ்யா மாறனுக்கு தற்போது 33 வயதும், அனிருத்துக்கு 35 வயதும் ஆகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனினும், இதுவரை இரு தரப்பிலிருந்தும் உறுதியான அறிவிப்பு வெளியாகாததால், இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anirudh Kavya Maran wedding News going viral in Kollywood


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->