பரந்தூர் பிரச்சனைக்கு விரைந்து சென்ற விஜய், முதல்வரான போது கோவை பெண் குழந்தை படுகொலையில் அமைதி காப்பது வருத்தமளிக்கிறது; எச். ராஜா..! - Seithipunal
Seithipunal


''தவெக துவங்கிய போது பரந்தூர் பிரச்சனைக்கு விரைந்து சென்று குரல் கொடுத்த திரு.ஜோஸப் விஜய் அவர்கள்.. தமிழக முதல்வரான பிறகு கோவையில் நடந்துள்ள பெண் குழந்தை படுகொலைக்கு அமைதி காப்பது வருத்தமளிக்கிறது'' என எச். ராஜா கூறியுள்ளார்.

கோவையில் சூலூர் அருகே 10 வயது சிறுமி காணாமல்போன நிலையில், குளக்கரையில் அவரது சடலத்தை காவல் துறையினர் மீட்டனர். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் ஆய்வு செய்ததில், கார்த்திக் என்பவருடன் சிறுமி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு பொதுமக்கள்மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டத்தின் முன் குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பெற்ற தாய்க்கு தெரியாமல், குழந்தையின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் தெப்போது எழுந்துள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''தவெக துவங்கிய போது பரந்தூர் பிரச்சனைக்கு விரைந்து சென்று குரல் கொடுத்த திரு.ஜோஸப் விஜய் அவர்கள்... தமிழக முதல்வரான பிறகு கோவையில் நடந்துள்ள பெண் குழந்தை படுகொலைக்கு அமைதி காப்பது வருத்தமளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அறவே ஒழிக்க, படுகொலைகளை தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்குவதும், மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை அறவே ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுப்பதும் தான் சரியான தீர்வாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

H Raja states that the Chief Ministers silence regarding the brutal murder of a young girl in Coimbatore is distressing


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->