'லிவ் இன்' உறவு முறை ஒரு சீரழிவு; மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்..! - Seithipunal
Seithipunal


''காலத்துக்கு ஏற்ப மாறுவது நமது நாட்டின் பாரம்பரியத்தின் விதி. 'லிவ் இன்' உறவு முறை ஒரு சீரழிவு. மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு'' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வ மாங்கல்ய சபா ஏற்பாடு செய்திருந்த நவீன கால தாய்மை குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோகன் பாகவத் உரையாற்றினார்.

அப்போது, ஜென்ஸீ தலைமைமுறையினர மற்றவர்களைப் பின்பற்றும் இயல்புடையவர்கள், எழுதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். அவர்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பதில்லை என்றும், எது அவர்களுக்கு உண்மையாகனதாகத் தோன்றுகிறதோ அதையே அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், திருமணம் என்பது தர்மத்தை வளர்க்கும் ஓர் ஒழுக்கம் என்றும், அதற்கு மாற்றாக 'லிவ்-இன்' உறவு முறை உள்ளது. இது நவீனத்துவம். இதன் விளைவுகள் என்ன? நமக்குத் தேவை மகிழ்ச்சிதான், பொறுப்புகள் அல்ல. தேவைப்படும்போது ஒன்றாக இருப்பது, தேவைப்படாதபோது பிரிந்து செல்வது. இதில், பொறுப்புகள் ஏதுமில்லை. இதனால் என்ன வளரும்? என்ன வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உலகெங்கம் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நவீனத்துவம் தேவை என்றும், காலத்துக்கு ஏற்ப மாறுவது நமது நாட்டின் பாரம்பரியத்தின் விதி.  ஆனால், 'லிவ் இன்' உறவு முறை ஒரு சீரழிவு என்றும், மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு என்று குறிப்பிட்டதோடு, திருநங்கைகள் நமது சமூகத்தின் ஒரு பகுதி. அவர்களை கீழ்த்தரமாகப் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகளின் அலைபேசி பயன்பாட்டு ஒழுக்கத்தைப் பற்றி நாம் போதிக்கிறோம். ஆனால், நாமே அலைபேசிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். குழந்தை அழுதால்கூட தாய் அலைபேசியை அதனிடம் கொடுத்து விடுகிறார். அந்த அளவுக்கு நிலைமை உள்ளது என்று கூறியதோடு, அலைபேசி பயன்பாட்டில் பெற்றோர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேப்போன்று, புதிய தலைமுறையினரிடம் அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை அவர்கள் தங்கள் நடத்தையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பதாகவும், சமூகத்தில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள். சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுத்தியுள்ளார்.

அத்துடன், புதிய தலைமுறை குழந்தைகளின் கேள்விகளுக்கு பெற்றோர் பதில் அளிக்க வேண்டும் எனவும், குடும்பம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க குடும்ப உறுப்பினர்களிடையே உரையாடல் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது பாரம்பரியத்தில் அரசாங்கம் இரண்டாம்பட்சம்தான் என்று கூறியதோடு, சமூகம்தான் முதன்மையானது. அரசாங்கம் இந்த சட்டத்தையோ அந்த சட்டத்தையோ இயற்ற வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதை நாம் நம் வீட்டிலேயே செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பழமையானவை அனைத்தும் பயனற்றவை என்று நம்பும் நிலையை ஆங்கிலேயர் ஆட்சி உருவாக்கியது என்றும், பல்வேறு விவகாரங்களில் முழுமையற்ற பார்வையால் மேற்கத்திய நாடுகள் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. நாமும் அவர்களையே பின்பற்றுகிறோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RSS chief Mohan Bhagwat says live in relationships are a perversion


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->