அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணைக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


சகோதரரர் குடும்பத்தை தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் 29-ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான புகார் குறித்து புதுவை லாஸ்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர். குறித்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. 

ஆனால், நீதித்துறை நடுவர் சேரலாதன் இடமாற்றம் செய்யப்பட்டதால் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நடுவர் சந்திரசேகர் தற்போது வழக்கை விசாரித்து வருகிறார்.

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை வேறு நீதிமன்றங்கள் விசாரிக்க நடத்த முடியாததன் காரணமாக, 02-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடத்தக்கூடாது என்று மரிய வில்சன் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே இவ்வழக்கை 02 முறை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரும் 29-ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கெனவே இவ்வழக்கை விசாரித்து வரும் 02-வது  குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் இவ்வழக்கை வரும் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Interim stay on the trial of the case against Minister Maria Wilson extended


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->