பேருந்து தீப்பிடித்து கொடூரம்: தாயைக் காப்பாற்றப் போராடிய மகனும் தன் தாயுடனே தீயில் கருகி உயிரை விட்ட உருக்கமான சம்பவம்... டிரைவரின் அலட்சியத்தால் 9 பேர் கருகி பலி! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் அமைந்துள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே (Yamuna Expressway) அதிவேகச் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், 9 பயணிகள் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த பாஜக மாவட்டப் பொருளாளர் நீரஜ் சோப்ராவின் மனைவி சுனிதா மற்றும் அவரது மகன் ஷஷாங்க் ஆகியோரும் அடங்குவர்.

தாயைக் காப்பாற்ற முயன்ற மகனின் துயரம்:

உயிரிழந்த சுனிதாவால் இயல்பாக நடக்க முடியாத சூழல் இருந்ததால், அவர் தனது மகனின் உதவியுடன் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். பேருந்தில் திடீரெனத் தீப்பிடித்த போது, மற்ற பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறிய போதிலும், சுனிதாவால் உடனடியாக வெளியேற முடியவில்லை. தாயைத் தனியாக விட்டுச்செல்ல மனமில்லாத அவரது மகன் ஷஷாங்க், தாயைத் தூக்கிக்கொண்டு வெளியே வரத் தீவிரமாக முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் தீ நொடிப் பொழுதில் பேருந்து முழுவதும் பரவியதால், தாயைக் காப்பாற்றப் போராடிய மகனும் தன் தாயுடனே தீயில் கருகி உயிரை விட்ட கோர சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

டிரைவரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு:

பேருந்து சென்று கொண்டிருந்தபோதே அதிலிருந்து புகை வரத் தொடங்கியதை அவதானித்த பயணிகள், உடனடியாக ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரிடம் எச்சரித்துள்ளனர். இருப்பினும், "புகை பேருந்துக்கு வெளியிலிருந்துதான் வருகிறது" எனக் கூறி பயணிகள் அளித்த எச்சரிக்கையை ஓட்டுநர் முற்றிலும் நிராகரித்து அலட்சியமாகப் பேருந்தை தொடர்ந்து இயக்கியுள்ளார். ஓட்டுநரின் இந்த அலட்சியப் போக்கே 9 பேரின் உயிரைப் பறித்ததாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேருந்தில் இருந்த ஏசி (AC) இயந்திரம் வெடித்ததன் காரணமாகவே தீ இவ்வளவு வேகமாகப் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஓட்டுநரின் அலட்சியம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yamuna Expressway Bus Fire Tragedy 9 Burned to Death Due to Driver Negligence BJP Leaders Wife Son Among Victims


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->