சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; கருப்பு படத்தின் 2 ஆம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி..! - Seithipunal
Seithipunal


சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து,  ஆர்.ஜே. பாலாஜி பல பேட்டிகளை அளித்து வருகிறார். அதன்படி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது;

சூர்யாவை மனதில் வைத்தே கருப்பு திரைப்படம் கதை எழுதப்பட்டது. முதலில் எழுதப்பட்ட கதையை விஜய்க்கு சொன்னேன். பின்னர் சூர்யாவுக்கு கதை சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அவருக்கு ஏற்ப கதையை திருத்தம் செய்து சொன்னது தான் கருப்பு படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கருப்பு திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருப்பதால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

அதாவது, வீட்டில் ஒரு பையன் ஜெயித்தது போன்று மக்கள் பார்ப்பதால் அந்த சந்தோஷத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ள ஊர் ஊராக செல்கிறேன். திரைப்படங்கள் தள்ளிப் போனதற்கு பல காரணங்கள் ஆனால் இப்போது படம் வந்துவிட்டது.

திரிஷா சிறப்பான முறையில் படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 23 வருடமாக டாப் இடத்தில் இருக்கிறார். அப்படி இருப்பது ரொம்ப கடினமானது. அப்படிப்பட்ட நபர் எனது திரைப்படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றுய் கூறியுள்ளார்.

அத்துடன், திரைத்துறையைச் சார்ந்த விஜய் முதல்வராக இருப்பது செமையாக (பெருமையாக ) பார்க்கிறேன் என்றும், விஜய்யின் வருகை எல்லாத்துறைகளும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறதாகவும், விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மக்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் நம்பிக்கையாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து க்ளெவி எழுப்பப்பட்டது, அதற்கு ஆர்ஜே பாலாஜி பதில் அளித்துள்ளதாவது; 

கருப்பு திரைப்படத்திற்கு பழைய கட்டணம் தான் பெறப்படுகிறது. 250 ரூபாய் கட்டணம் நடைமுறைக்கு வந்த பிறகு கருத்து சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதோடு, திரையரங்கு உரிமையாளர்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் சரியாக இருக்கும் என்றும், அதே போன்று மக்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் குறைந்த அளவு கட்டணம் இருந்தால் சந்தோசமாக இருக்கும். இதற்கு அரசு இருப்பதால் நல்ல முடிவை அரசு முடிவு செய்யும். அதற்கேற்ப சினிமா துறையும் கட்டுப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், நான் படம் எடுக்கும் இடத்தில் இருக்கிறேன் எனக்கு அதிக டிக்கெட் விற்றால் சந்தோஷப்படுவேன். அதனால் திரையரங்கு டிக்கெட் கட்டண முடிவில் அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் அம்மன் படம், முருகன் படம் வந்து இருக்கிறது அந்த வரிசையில் கருப்புசாமி வைத்து படம் எடுத்து இருக்கிறேன். மிகவும் அரிதாக தான் மற்ற மதங்கள் சார்ந்த படம் வந்திருக்கிறது. நான் மட்டும் மதத்தை வைத்து படம் எடுக்கவில்லை. காலங்காலமாக இருக்கக்கூடிய வழக்கம்தான். வரும் காலத்தில் மாதாவை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அருளால் அந்தப் படத்தையும் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறதால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கருப்புசாமி என அனைத்து கடவுளையும் வழிபாடு செய்யவேன் என்று கூறியுள்ளார். அதனால் எந்த கடவுள் வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து படம் எடுப்பேன் என்றும், கருப்பு பாகம்  இரண்டு வர உள்ளது. கருப்பு திரைப்படம் என்ன கதை எழுதப்பட்டதோ அதை அப்படியே எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RJ Balaji Shares an Update on the Sequel to the Film Karuppu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->