''தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தரலாம்; பாஜக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்''; மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை..!
Union Minister of State confident that DMK may support the constituency redelineation bill
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடக்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் ஒவ்வொரு நாளும் அதிரடி நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில் ''தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தர வாய்ப்புள்ளது'' என்று மத்திய அமைச்சர் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளமை தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை-அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார். கடந்த முறை இந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்தான் என்று குறிப்பிட்ட அவர், இந்த முறை பலம் அதிகமாக உள்ளதாகவும், தற்போது திமுக காங்கிரஸ் இடையே மோதல் நிலவுவதால், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் என்டிஏவுக்கு ஆதரவளித்துள்ளார்கள். நிச்சயமாக இந்த முறை இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காதபோது அதிமுக தலைமையிலான கூட்டணியிடம் ஆதரவு கேட்பார் என நினைத்தோம். ஆனால் அவர் சிறுசிறு கட்சிகளை ஒன்று சேர்த்து ஆட்சி அமைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தற்போது பிரிந்திருப்பதால் பலம் இல்லாமல் உள்ளதாகவும், ஆகையால் தான் இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும்,அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், அடுத்த தேர்தலில் அதிமுக பலம் பெற்று அனைவரும் ஒன்றிணைந்து பலமாக போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.
தற்போது திமுக- காங்கிரஸ் ஒன்றாக இல்லை. இந்தியா கூட்டணியை விட்டு திமுக வெளியேறிவிட்டதால், காங்கிரஸின் முடிவுகளுக்கு திமுக ஒத்துழைப்பு தராது என நம்புகிறேன். இந்த மசோதாவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக பாஜக தலைவர்கள், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு தரலாம். அல்லது, மசோதாவை புறக்கணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Union Minister of State confident that DMK may support the constituency redelineation bill